அரியலூர் செப், 27
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
இதில் தா.பழூர் அருகே உள்ள சுண்டப்பள்ளம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் போதிய இடவசதி இல்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. எனவே எங்களின் குடும்ப நலன் கருதி, வறுமையில் சிக்கி தவித்து வரும் எங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். தொடர்ந்து ஏராளமானவர்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.