Spread the love

திருப்பத்தூர் செப், 25

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை தமிழகம் இயக்க திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுடன் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்க விழா கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் நடந்தது.

இவ்விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி மர மகிலம், மலைவேம்பு, தேக்கு, பூவரசன் போன்ற 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குநர்.பச்சையப்பன், தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் மோகன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, பிரபாவதி, ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *