புதுச்சேரி செப், 23
ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை ஜிப்மரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.சரவணன்குமார் மற்றும் தலைமைச் செயலர் ராஜூவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கவர்னர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்