ராமநாதபுரம் செப், 18
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ளது காஞ்சிரங்குடி. இங்கிருந்து சுமார் 2கி.மீ தொலைவில் உள்ளது மகான் பக்கீரப்பா தர்ஹா உள்ளது. இங்கு வருடந்தோறும் கொடியேற்றப்பட்டு சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து சமுதாய மக்களும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் ஒன்று கூடுவார்களா கூடுவார்கள். இந்த விழா சுமார் 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விழாவின் போது காஞ்சிரங்குடி கிராமத்தில் இருந்து சந்தனக்கூடு எடுக்கப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்டு வரப்பட்டு மகான் பக்கீரப்பா தர்கா கடற்கரை ஓரம் வைக்கப்படும். இதில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிரங்குடி விழா கமிட்டியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.