திருப்பூர் செப், 17
மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று முதல் கோவை- திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்கத்தைச் சேர்ந்த கோடங்கிபாளையத்தில் 6,500 விசைத்தறிகள், பருவாய் ஊராட்சி பகுதியில் 2ஆயிரம் விசைத்தறிகள் என 8,500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.