Spread the love

மதுரை செப், 10

ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. எனவே அந்த வழியே ரெயில் இயக்குவதில் குளறுபடி நீடித்து வருகிறது. இந்தநிலையில், வருகிற 15 ம் தேதி வரை மதுரையில் இருந்து பகல் 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை, செங்கோட்டையில் இருந்து மதியம் 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *