நாகர்கோவில் செப், 10
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 5 தினங்கள் வரை இந்த மழை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் மழையின் தாக்கமாக, தமிழகத்தின் குமரி மாவட்டத்திலும் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள எல்லை அருகே அமைந்துள்ள தமிழக பகுதிகளில் பரவலாக மழை நீடித்தே வருகிறது.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவுக்கு நீர்வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.