திருவள்ளூர் செப், 7
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்