அரியலூர் செப், 6
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமை பெண் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
வாலாஜாநகரத்தில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்பட்ட வங்கி கணக்கு அட்டைகளை ஆட்சியர் ரமணசரஸ்வதி சட்ட மன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.