துபாய் ஆக, 26
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது.
இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் , அவைத்தலைவர் காமராஜ், பொருளாளர் வாகை சதீஷ்குமார், மகளிர் அணி கலாவதி, துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி, சாகுல் ஹமீது,சிவக்குமார், கார்த்திகேயன், செல்வம் சேகர், இளைஞர் அணிச் செயலாளர் கிருஷ்ணா அருணாச்சலம், அமீரக பிரிவு சமூக வலைதள செயலாளர் தங்க வடிவேலு, துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், துணை செயலாளர் கேப்டன் சிவா, மீடியா செயலாளர் நைனா முஹம்மத், முஹம்மது தாரிக், முன்னாள் செயலாளர் காரல் மார்க்ஸ், உள்ளிட்டோர் முன்னிலையில் துபாயில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தின் மேல் மாடியில் உள்ள நிகழ்ச்சி கூடத்தில் கேக்வெட்டி கொண்ண்டாடப்பட்டது.
மேலும் இவ்விழாவிற்கு வந்திருந்த முக்கியபிரமுகர்கள் அனைவரும் கேப்டன் விஜயகாந்த் பற்றி வாழ்த்துரையோடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக , WIT ஈவென்ட் நிறுவனத்தின் சேர்மன் மெர்லின், முத்தமிழ் சங்க நிர்வாகி சின்னா, தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, சமூக ஆர்வலர் உஸ்மான் அலி, ஊடகவியலாளர் நசீர், ஜபார், பொறியாளர் பஹத், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கேப்டன் விஜயகாந்த் அரசியலையும்தாண்டி அனைவருக்கும் பிடித்த நல்ல மனிதர் ஏழை எளியோர்களுக்கு பல உதவிகளை செய்தவர் அவருடைய பிறந்த நாள் விழாவில் தான் கலந்துகொண்டது மிகவும் சந்தோசமாக நினைக்கிறேன் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தேமுதிக செயலாளர் கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.