துபாய் மே, 29
ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டுவரும் ஆரா அகாடமியா மூலமாக மிக சிறப்பாக NEET, JEE and CBSE மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் தரமான கல்வியை வழங்கிவருகிறது. அக்கல்வி நிறுவனத்தின் சார்பாக கடந்த 25 May 2025 ஞாயிறு அன்று ஷார்ஜா நட்சத்திர ஹோட்டலில் சுமார் 80 க்கும் மேற்பட்ட 10 & 12வது மாணவ மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆரா அகாடமியா நிறுவனர்கள் (ஆசிரியை & ஆசிரியர்கள்) Dr ஐஸ்வர்யா ஆனந்த், சூரஜ், வர்ஷா சூரஜ் ஆகியோர் முன்னிலையில் UTS-தலைவர் யுஏஇ தமிழ்ச் சங்கம்) ரமேஷ் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது .
இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு நினைவுச்சின்னம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு கௌரவ விருந்தினராக மேதகு முஹம்மது பின் அப்துல்லாஹ் அல் மர்சூகி மற்றும் சிறப்பு விருந்தினராக கல்ப் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் மண்டா வெங்கட்ரமணா, Dr சித்திரைi பொன் செல்வன் (Curtin University Dubai), Dr பால் பிரபாகர், துபாய் ஈமான் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி வளைகுடா நெறியாளர் Kamal KVL, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான முஹம்மது நஜீம் மரிக்கா, தனியார் பத்திரிக்கை மேலாளர் ராம் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு நினைவுச்சின்னம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் கொடுத்து மாணவ மாணவிகளை கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை நிறைவுசெய்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.