ராமநாதபுரம் ஜூலை, 27
ராமநாதபுரம் அமேசான், பிளிப்கார்ட், ZOMATO, MEESHO போன்ற இணைய நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்தார். நலவாரியத்தில் பதிவு செய்த டெலிவரி ஓட்டுநர்கள் அந்த லிங்கில் சென்று விண்ணப்பித்து மானியம் பெறலாம். விவரங்களுக்கு ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.