திருப்பூர் ஜூலை, 2
திருப்பூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 1 கிலோ அளவுக்கு தங்கம், லம்போர்கினி கார் என வரதட்சணையாக பெற்றும், மேலும் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர், அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த மகளின் மரணத்திற்கு உரிய நீதி பெற்று தருமாறு கோரி இபிஎஸ்ஸிடம் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.