தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.
கீழக்கரை நகர் திமுக சார்பில் முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா(எ)முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணைதலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தனர்.
மேலும் நகர் செயலாளர் SAH.பஷீர் அகமது வரவேற்றார். மாநில தலைமை கழக பேச்சாளர் ஆலங்குடி செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நகர் துணை செயலாளர் மூர் ஜெய்னுதீன் கீழக்கரை பேச்சாளர் நிஸ்டார் அலி,முனீஸ்வரன்,நகர்மன்ற உறுப்பினர்களான மூர் நவாஸ்,நசுருதீன்,ஃபயாஸுதீன்,சுஐபு,மீரான் அலி உள்ளிட்ட கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்