சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு செல்லக்கூடிய 7 மாநகர பேருந்து சேவை நேற்று தொடங்கியது. பேருந்து சேவையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அக்கரைக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.