ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை ₹1000 வரவு வைக்கப்படவுள்ளன. அதே நேரம், மேல்முறையீடு செய்த பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.