சென்னை மார்ச், 23
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 29 முதல் 31ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இணை ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40க்கு திருச்சி சென்றடையும். அதே போல் தாம்பரம் கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.