கீழக்கரை பிப், 22
ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் அரண்மனை, பாரதி நகர் கேணிக்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வரும் நிலையில் அதனை அப்புறப்படுத்தாத நகராட்சி நிர்வாகம் சின்னக் கடைப்பகுதி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி என்பதால் இத்தகைய அராஜகத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ராமநாதபுரம் நகராட்சி மேற்கொண்ட இத்தகைய பாகுபாடான அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து அங்குள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எஸ்டிபிஐ கட்சி
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தெரிவித்துள்ளார்.
ஜஹாங்கிர் ஆருஷி
மாவட்ட நிருபர்