கீழக்கரை செப், 1
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சிக்கல் கிராமத்தில் காலை 9:30 முதல் நிலை மீட்பாளர்களுக்கான மாவட்ட அளவிலான வெள்ளம் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட வழங்க அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மரகதநாதன் அவர்கள் மற்றும் கடலாடி வட்டாட்சியர் முருகவேல், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் மற்றும் தாலுகா சப்ளை அலுவலர் பரமசிவம் மற்றும் வருவாய் அலுவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல் துறை அலுவலர்கள் மற்றும் கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிக்கல் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.