துபாய் பிப், 9
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சமூக சேவைகள் செய்து வரும் துபாய் புல்லிங்கோ என்ற youtube குழுவினர்கள் ஏற்பாட்டில் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் வெளியீடு துபாய் அல்குரையர் மாலில் உள்ள ரியல் சினிமாவில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கேக்கு வெட்டி கொண்டாடி கே ஆர் ஜி குழும நிறுவனங்களின் நிறுவனர் கண்ணன் ரவி மற்றும் புதுமை தமிழச்சி ஸ்ரீதேவி ஆதரவோடு VJ சமீர், ஆர்ஜே மாயா தொகுத்து வழங்க திரைப்படம் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக துபாய் ஆட்டோ ட்ரோம் இம்ரான் புதுமை தமிழச்சி ஸ்ரீதேவி தினகுரல் நாளிதழின் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை துபாய் புல்லிங்கோ குழுவினர்களான புள்ளிங்கோ ஷாநவாஸ், புல்லிங்கோ அயாஸ், புல்லிங்கோ ஜனனி புல்லிங்கோ இபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E