சென்னை ஜன, 29
தமிழக முழுவதும் இன்றும், நாளை மறுதினமும் பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் என நம்பப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திர பதிவுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும், நாளை மறு தினமும் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன.