கீழக்கரை ஜன, 29
கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர் பலி நடந்துள்ளது.
இந்த சாலையை சீர்செய்து கொடுக்குமாறு கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இதுகுறித்து நமது வணக்கம் பாரதம் இதழிலும் எழுதி வந்தோம்.கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் வரை நடைபயணம் செல்லும் போராட்டத்தை சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர்.
கடந்த 23.01.2025 அன்று அவசர அவசரமாக சேதமடைந்த சாலைகளுக்கு தையல் ஒட்டு போடும் வேலை நடைபெற்றது.ஒட்டு போட்டு ஆறு நாட்களுக்குள்ளாக தையல் பிரிந்து மீண்டும் குண்டும் குழியுமாகி விட்டது.
பெயரளவில் ஒட்டு போட்ட நெடுஞ்சாலை துறையின் செயலை கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.நிரந்தர தீர்வாக சேதமடைந்த சாலையை அகற்றி விட்டு புதிதாக சாலை அமைக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்