சென்னை அக், 17
தீபாவளிக்கு ரேஷன் கடையில் துவரம் பருப்பும் பாமாயிலும் தடை இன்றி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இம்மாதத்திற்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, ஒரு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் தீபாவளிக்கு பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார். முன்னதாக பருப்பு பற்றாக்குறை இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியிருந்தார்.