துபாய் அக், 6
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக மீலாது விழாவையொட்டி நடத்தப்பட்ட முஹம்மது நபிகள் பெருமானார் குறித்து பேச்சிப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான், துணைத்தலைவர் கமால் தலைமையில் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசாக 38 தங்க காசுகளை KRG குழும நிறைவனத்தின் நிறுவனர் தொழிலதிபர் கண்ணன் ரவி சார்பாக வழங்கப்பட்டது இது ஒரு மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழ்ந்தது .
இதனைத் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் ஐந்து நபர்களுக்கு முதல் பரிசு PSMHK இன்வெஸ்ட்மென்ட் தலைவர் ஹபிபுல்லா கான் சார்பாக தங்க காசுகள், இரண்டாம் பரிசு டாப் ஸ்டார் குழுமத்தின் சேர்மன் பைரோஸ் சார்பாக தங்க காசுகள், மூன்றாம் பரிசு volvobenz நிறுவனர் ஹமீது யாசின் சார்பில் தங்க காசுகள் , நான்காம் பரிசு பிரைட் லைன் கிளீனிங் சர்வீஸ் முகமது ஜலாலுதீன் சார்பாக கைப்பேசியும் மற்றும் ஐந்தாம் பரிசு ஹைலைட்ஸ் ஜெனரல் டிரேடிங் ஹாஜா அலாவுதீன் சார்பாக டேபிள் ஃபேன் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் கவுனிசிலின் துணை தலைவருமான அமீன் பதான், அபூபக்கர், அசார் பாஷா , முஹிபுல் உலமா மஹ்ரூப், கேரள அசோசியேசன் முனீர், தமிழ் லேடிஸ் & ஃபேமிலி அசோசியேஷன் பொதுச் செயலாளர் சேனியோ, அமீரக தமிழ் சங்க தலைவி டாக்டர்.ஷீலா, வெளிநாடு வாழ் தமிழர்களின் அமீரக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஹேமா, ஃபார்ம் பாஸ்கெட் பைசல், கிரீன் குளோபல் ஜாஸ்மின், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ரோகினி, துபாய் புளிங்கோ ஷாநவாஸ் மற்றும் அயாஸ், ஆர்ஜெ மாயா, தமிழக வெற்றி கழகம் அமீரக செயலாளர் இஸ்மாயீல் ஆகியோர் பங்கேற்றனர்
ஹஸ்ரத் முஜிபுர்ரஹ்மான் குழு வெற்றி பெற்றவர்களை தேர்வுசெய்தது.
இந்த நிகழ்ச்சியினை ஈமான் கலாச்சார மையம் நிர்வாகிகள், விழாகுழு சமீம், ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா, மிடியா செயலாளர் அஸ்கர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுமி அஸ்லினா கிராத் ஓதினார். ஈமான் கல்வி குழு செயலாளர் சேக் நன்றி கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.