அதிக அளவு சத்துக்களைக் கொண்ட கடலை மிட்டாய் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உகந்தது. கடலை புரதச் சத்தினை அதிகளவு கொண்டது. அனைத்து பருப்பு வகைகளிலும் புரதம் நிறைந்திருந்தாலும் அவற்றில் கூடவே பித்தமும் சேர்ந்து கொள்வதால் தொடர்ச்சியாக உண்ணும் பொழுது பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காலையில் பித்தம் அதிகமாக இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப் படும் பொழுது கடலைக்குரிய பித்த சேர்க்கையை சீர் செய்து விடுகிறது. இதுதான் கடலை மிட்டாயின் அனைத்து நன்மைகளுக்குமான அடிப்படை.
வெல்லத்தின் சேர்ப்பில் பித்தம் சீர் செய்யப் படுவதால் தொடர்ச்சியாக கடலை மிட்டாயை உண்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே கடலையும், வெள்ளமும் சேர்ந்து அதி புரதம், இரும்பு, செலினியம் சத்துக்களைக் கொண்ட ஒரு சிறந்த பண்டமாக உருப்பெறுகிறது. கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை விட குழந்தைகளுக்கு சிறந்த இனிப்புப் பண்டம் வேறு இல்லை.
கடலை மிட்டாயின் சிறப்புகள்:
1) அதிக புரதச் சத்து
2) கடலையின் பித்த குணத்தினை சரி செய்யும் வெள்ளத்தின் சேர்க்கை
3) அதிக இரும்பு மற்றும் செலினியம் சத்துக்கள்
4) தசைகளை உறுதியாக்குவது – குறிப்பாக குழந்தைகளுக்கு
5) அதிக புரதம் உடம்பின் சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தும்
6) மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது – குறிப்பாக குழந்தைகளுக்கு
7) மற்ற குழந்தைகள் முட்டைகளில் இருப்பது போல் எந்தக் கெட்ட கொழுப்பும் அற்றது.