கீழக்கரை செப், 18
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் சகாப்தத்தில் புதுமை மற்றும் நிலையான வணிக வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையேற்று நடத்தினார் விழாவின் துவக்க உரையை எத்தியோப்பியா நாட்டின் கேம்பலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் தமிழரசு வழங்கினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியர் விக்னேஷ் மாநாட்டின் தலைப்பு குறித்து உரையாற்றினார்.
முன்னதாக முஹம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆய்வு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டார். இந்த சர்வதேச மாநாட்டில் பத்திற்கு மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை மாநாட்டின்போது சமர்ப்பித்தனர்.
கல்லூரியில் பேராசிரியர் சதாம் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் பார்த்திபமணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். இம்மாநாட்டிற்கான மதிப்பாய்வு விழாவினை சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி வணிகவியல் துறை ஆராய்ச்சி தலைவர் முனைவர் செண்பகனந்தன் மதிப்பாய்வு உரை நிகழ்த்தி ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார் பேராசிரியை ருபைதா ஹய்றியா நன்றி உரை வழங்கினார்.
மேலும் விழாவிற்கான ஏற்பாட்டினை துறை தலைவர் அஜ்மல் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்