சென்னை ஆக, 30
மின்சார வாரிய ஊழியர்களின் இறுதிச்சடங்கு நிதியை உடனே விடுவிக்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. பணியில் மரணிக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தற்போது 25,000 முன் பணம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை தாமதமாக வழங்குவதாக மின்சாரவாரிய துறைக்கு புகார் வந்ததாக தெரிகிறது. இதை எடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ள மின்சார வாரியம் அந்தந்த வட்டத்தில் தற்காலிக முன்பணத்தில் இருந்து நிதி வழங்க அதிகாரிகளுக்கு மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த உத்தரவிட்டுள்ளது.