சென்னை ஆக, 30
ராஜீவ்காந்தி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் அரசு சரி செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதாக குறிப்பிட்ட அவர் இதற்கு தீர்வு காணும் வகையில் சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.