புதுடெல்லி ஆக, 30
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார்.
மேலும் 20 ஓவர் அதிரடியான ஆட்டம் என்பதால் அதில் இருந்து விலகலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலியை 20 ஓவரில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.