ராமநாதபுரம் ஆக, 14
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் 24 அரசுத்துறை அதிகாரிகளும் 7 தனிநபர்களும் என 31 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ரூபாய் 4 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேற்கண்ட லஞ்ச புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டிருந்த மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனடியாக சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது புரோக்கர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க முன்வர வேண்டும்.
அவ்வாறு லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின் குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்க கூடியவர்கள் கீழ்க்கண்ட 94982 15697, 94986 52159 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜஹாங்கீர் அரூஸி./மாவட்ட நிருபர்.