துபாய் ஆக, 6
ஐக்கிய அரபு அமீரக துபாயில் கீழக்கரையைச் சேர்ந்த ரஸ்மி மற்றும் அவரது நண்பர் ஹனீபா இணைந்து துபாய் தேராவில் டேஷ்டி பிரியாணி உணவகம் நடத்தி வருகின்றனர். இதன் கிளை துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிரான்ஸ் பில்டிங் பிரிவில் நியூ டேஸ்டி பிரியாணி புதிய உணவகம் கடந்த வருடம் ஜூலை 2024 ஆண்டு திறக்கப்பட்டது. இவ்வுணவகத்தின் முதலாம் ஆண்டு சிறப்பாக நிறைவுப்பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துபாயில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினார்களாக கலந்துகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கடையின் உரிமையாளர்கள் ஹனிபா, ஹமீது ரஸ்மின் மற்றும் மேலாளர் மஹரூப் ஆகியோரின் அழைப்பின்பெயரில் கேப்டன் டிவி மற்றும் தமிழக குரல் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் ஈவென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உள்பட அமீரகத்தில் வசிக்கும் கீழக்கரை மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்தோர் கலந்துகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் ஆற்றிய உரையில், நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தின் வெற்றிக்கு தங்களின் வாடிக்கையாளர்களின் பேரன்பும் பேராதரவும்தான் காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.