கீழக்கரை ஆக, 30
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள HR FITNESS SPOT உடற்பயிற்சி கூடத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான முஹம்மது ரியாலுத்தீன் (27) . கீழக்கரை முகைதீனியாவில் பள்ளிப் படித்த இவர். வேல் டெக் யூனிவர்சிட்டியில் B.E சிவில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார்.
இவர் சென்னையில் நேற்று சாய் பிட்னஸ் சார்பில் நடைபெற்ற இரண்டாவது சாய் கிளாசிக் 2022 பாடி பில்டிங் மற்றும் பென்ஸ் பிசிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்தையும், புரோன்ஸ் மெடல் அதே போட்டியில் பாடி பில்டர்ஸ் இரண்டாவது இடத்தைப் பெற்று பதக்கம் வென்றார்.
மேலும் இந்த வெற்றிக்காக கீழக்கரை முக்கியஸ்தர்கள், கீழக்கரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் இவரது வெற்றிக்காக கீழக்கரை முகைதீனியா பள்ளிக்கூடம் தனது மாணவனை நினைத்து மிகவும் பெருமை பெருமிதம் கொள்கிறது. இதன் மூலம் இவர் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது