புதுடெல்லி ஜூலை, 17
ஜூலை 21 இல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.