சென்னை ஜூலை, 9
ரயில்கள், ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே தலைமை இயக்குனர் ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் வரும் கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தல’ விவாகரத்தில் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.