சென்னை ஜூலை, 3
டூப்ளிகேட் சிம் வழங்கியதற்காக வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் இடத்தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் அடையாளம் தெரியாத ஒருவர் ராணுவ வீரர் ஷாம் குமாரின் மொபைல் எண் கொண்ட டூப்ளிகேட் சிம் கார்டை பெற்று அவரது வங்கி கணக்கிலிருந்து ₹2.8 லட்சத்தை எடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு ₹3.8 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.