துபாய் ஜூன், 25
ஐக்கிய அரபு துபாயில் உள்ள அல்குரையர் மாலில் உள்ள ஸ்டார் திரையரங்கில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகரும்மான விஜய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடிய அமிரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள்.
இந்நிகழ்வு தளபதி வெற்றிக் கழகம் என்ற பெயரில் அமீரக வசிக்கும் விஜய் ரசிகர் மன்ற தலைவர் அன்பு மற்றும் பொறுப்பாளர்கள் இஸ்மாயில், விஜயராகவன் மற்றும் ரவிக்குமார் தலைமையில் அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள் இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி தமிழ் திரைப்படம் மீண்டும் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக புதுகை ஸ்டார் டிவி மற்றும் தமிழக குரல் டிவியின் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தமிழ் தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் பால் பிரபாகர், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, திமுக நிர்வாகி காரல் மார்க்ஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.