கடலூர் ஆக, 29
விருத்தாசலம் அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா தேவேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் கனிமொழி கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் கட்டமைப்பு குறித்து விளக்கி பேசினார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.