கோயம்புத்தூர் ஆக, 29
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகள் வழிபாடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில் வழிபாடு செய்ய 108 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மேலும் வால்பாறை உட்கோட்ட காவல் துணை ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல் ஆய்வாளர் கற்பகம் மேற்பார்வையில் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த துணை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்