துபாய் ஜூன், 18
ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சல்வா லைட் மியூசிக் நிறுவனர் முனைவர் பகவதி ரவி தலைமையில் நடைபெற்ற “கோடைக்கால காற்றே” இசை நிகழ்ச்சியும் மறைந்த பாடகர், சிறந்த நடிகர் மலேசியா வாசுதேவனுக்கு 80வது பிறந்த தின புஸ்பாஞ்சலியும் துபாய் பார்துபாய் பகுதியில் உள்ள தனியார் பள்ளி உள்ளரங்கில் ஆர்ஜேருபீனா மற்றும் ஸ்ரீ தொகுத்து வழங்க நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகைருமான யுகேந்திரன் தன் மனைவியுடன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சல்வா மியூசிக் குழுமத்தின் ஆசியா புக் சாதனை படைத்த ஆண், பெண் பாடகர்களான அமீரக மலேசியா வாசுதேவன் என்று அழைக்கப்படும் சல்வா மியூசிக் நிறுவனர் பகவதி ரவி, பல்லவி சுரேந்தர், அஜய், கோகுல் பிரசாத், ஜெகநாதன், பத்மினி, வள்ளி ரவி, மிருதுளா ரமேஷ், சரண்யா, ஜனனி, சமிக்ஷா ஆகியோர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டில்ஸ் ரவி, முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன், வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், GV ப்ரோடக்சன் பிரசாத், அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலா, நடிகை மற்றும் பாடகி பல்லவி சுரேந்தர், தினகுரல் நாளிதழ் வளைகுடா நிருபரும் வணக்கம் பாரதம் வாரஇதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்க நிர்வாகிகள், சுரேஷ், பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.