அரியலூர் ஆக, 29
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,500 சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்றன. அரிமா சங்க துணை ஆளுநர் சவுரிராஜ் முன்னிலை வகித்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.