ராமநாதபுரம் ஜூன், 15
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவன் ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பொதுமக்கள், உறவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து இறுதி சடங்கு செய்து வருகின்றனர்.