சென்னை ஜூன், 8
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு பொறியியல் படிக்க மொத்தம் 2. 49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜூலையில் தரவரிசை பட்டியல் வெளியிடவும் ஆகஸ்டில் கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.