சிவகங்கை மே, 18
கடந்து சில நாட்களாக அதிக வெயில் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக சரிந்ததால் கடும் தண்ணீர் கட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தண்ணீர் எடுக்க 15 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்வதால் குடிநீர் சிக்கல் நீங்கியுள்ளது.