சென்னை மே, 16
தமிழகத்தில் அக்ஷய திருதியை நாளில் விற்பனையான தங்கத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு 500 கோடி வருவாய் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய திருதியை நாளில் மட்டும் ₹16,750 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது. 25,000 கிலோ தங்கத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர். நகை விலை உச்சத்தை தொட்ட நிலையிலும் கடந்த ஆண்டை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது.