Spread the love

கீழக்கரை மே, 12

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள இம்பாலா காம்ப்ளக்ஸில் அமைந்திருக்கும் இம்பாலா M.H. செய்யது சுல்தான் இப்ராஹீம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அல்மஸ்ஜிதுர் ரய்யான் A/C பஜார் பள்ளியில் 10. 5. 2024 அன்று மாலை 5:00 மணியளவில் பள்ளி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு மற்றும் முதல் ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் அரசு காஜி V.V.A. சலாஹூத்தீ அலீம் உமர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்

M.K.E உமர், KECT தலைவர் M.முகம்மது மன்சூர், இந்தியன் மார்ட் M.அப்துல் சமது  M.I. யூசுப் ஆலிம் ஹாமீதி ஆகியோர் கௌரவ ஆலோசர்களாக முன்னிலை வகித்தனர்.

பள்ளி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு:

பள்ளியின் தலைவராக S. ஜஹாங்கிர் ஆரூஸி, துணைத் தலைவராக M.S. செய்யது இப்ராஹீம் (எ) மரைக்கா, செயலாளராக M.M.K. அகமது ரஷீத் இப்ராஹிம், துணைச் செயலாளர்களாக S. காதர் உசேன் மற்றும் M.சஃபீர் அகமது, பொருளாளராக M.ஹாஜா முகைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் பள்ளி நிர்வாக உறுப்பினர்களாக ஜாஸ் சூப்பர் மார்க்கெட் ரியாஸ், A.சையது பிலால், கென்னடி ஸ்டூடியோ S.சஃபி அகமது, H. சாகுல் ஹமீது, இன்ஜினீயர் H. ஆசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கௌரவ ஆலோசர்களாக கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி வட்டார ஐக்கிய ஜமாஅத் துணை செயலாளர் S.சுபைர், கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு S. சீனி இப்ராஹிம், நடுத்தெரு பள்ளி ஜமாஅத் இணைச் செயலாளர் ஹபீப் முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

இந்நிகழ்வை அல்மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளியின் இமாம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் முக்கிய ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பள்ளியின் மூலமாக ஏழை மக்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் அளிக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள அவரை பாராட்டி அல் மஸ்ஜூதுர் ரய்யான் பஜார் பள்ளி கௌரவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்பாலா M.H சுல்தான் செய்யது இப்ராஹீம் அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகளுக்காக பொதுமக்கள் மற்றும் பிற டிரஸ்டிகளிடமிருந்து எவ்வித உதவியும் பெறப்படாது என்பது சிறப்பு அம்சமாகும்.

அறக்கட்டளையின் நிறுவனர், தலைவர் தனது சொந்த பணத்தைக் கொண்டே இந்த நிறுவனம் இயங்கி வரும். இதனைக் கொண்டு ஏழை மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *