கீழக்கரை மே, 6
இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 142 மாணவிகள் தேர்வு எழுதி 142 பேரும் 100% தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
577/600 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ள அல் வாஷிபா கணக்கியலில் 100 மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.574/600 மதிப்பெண் பெற்று பள்ளியின் இரண்டாம் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ள அல் வாஹிபா பொருளியலில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். 553/600 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தை பிடித்த மாணவி செய்யது சுலைஹா கணக்கியலில் 100/100 பொருளியலில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மாணவிகளின் சாதனையை பாராட்டி அப்பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ் சீனா தானா(எ) செய்யது அப்துல் காதர் வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி தலைமையாசிரியை ஜாக்குலின் லதா பெஸ்டஸ் உள்ளிட்ட அனைத்து ஆசிரியைகளுக்கும் பாராட்டினை தெரிவித்துள்ளார்.
கீழக்கரையில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த முகைதீனியா மெட்ரிக் பள்ளி!
582/600 மதிப்பெண் பெற்ற மாணவி பஸ்லின் நுஹா வணிகவியல்,பொருளியல்,கணினி பயன்பாடு உள்ளிட்ட மூன்று பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்து அபார சாதனை புரிந்துள்ளார். 565/600 மதிப்பெண் பெற்ற மாணவி ஹம்ஜுல் ஜீனா பொருளியலில் 100/100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.554/600 மதிப்பெண் பெற்ற மாணவி ஹாஃபிழா மூன்றாமிடத்தை பிடித்தார்.
32 மாணவர்களில் 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர் மாணவியரை பள்ளி தலைவர் M.M.S.முகைதீன் இப்றாகீம்,தாளாளர் அல்ஹாஜ் மௌலா முகைதீன்,பிரின்சிபல் அஸ்வத் இப்றாகீம் உம்மாள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.
100% தேர்ச்சி காட்டியுள்ள ஹமீதியா மெட்ரிக் பள்ளி,31 மாணவர் மாணவியர் தேர்வெழுதி 31 பேரும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.577/600 மதிப்பெண் பெற்ற மாணவி பாத்திமா பள்ளியின் முதலிடத்தை பிடித்துள்ளார். மாணவி சஜ்ஜா தாஜ் 572/600 மதிப்பெண்ணும்,நஸ்ஹா 571/600 மதிப்பெண்ணும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்,மாணவியர் கணக்கியலில் மூன்று பேரும் வணிகவியலில் நான்கு பேரும் பொருளியலில் ஒருவரும் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஒரே ஆண்டில் 14 பேர் சதமடித்து சாதனை புரிந்த ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி!
கீழக்கரை கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி மாணவி ஆய்ஷத்து ரஷ்ஃபா 575/600 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதலிடத்தை பிடித்தார்.மாணவர் அல்ஃபஹான் 568/600 மதிப்பெண்ணும் மாணவர் முகம்மது ஆதிப் 562/600 மதிப்பெண்ணும் பெற்று இரண்டு மற்றும் மூன்றாமிடத்தை பிடித்தனர்.
இப்பள்ளியின் இரண்டு மாணவிகள் பொருளியலில் 100/100 மதிப்பெண்ணும் இரண்டு மாணவர்கள் கணக்கியலில் 100/100 மதிப்பெண்ணும் வணிகவியலில் மூன்று மாணவியர் மற்றும் இரண்டு மாணவர் என ஐந்து பேர் 100/100 மதிப்பெண்ணும் கணினி பயன்பாடு பாடத்தில் நான்கு மாணவியர் ஒரு மாணவர் என ஐந்து பேர் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
கீழக்கரையில் ஒரே ஆண்டில் 14 பேர் சதமடித்துள்ளது ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றி பெற்ற மாணவர் மாணவியர் அனைவருக்கும் பள்ளி தாளாளர் முகம்மது சுஐபு,தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளையும் பாராட்டினர்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் சதமடித்த மாணவர் மாணவியர்!
இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 576/600 மதிப்பெண் பெற்ற மாணவி பாத்திமா ரிமாஸா பள்ளியின் முதலிடத்தை பிடித்ததோடு வணிகவியலில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
574/600 மதிப்பெண் பெற்ற மாணவர் மனோஜ் கணினி அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று பள்ளியின் இரண்டாமிடத்தையும் 567/600 மதிப்பெண் பெற்ற மாணவி பஸீஹா மூன்றாமிடத்தை பிடித்ததோடு கணினி பயன்பாடு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் அப்சிரத்துல் தன்சிலா,சப்ரின் ஆயிஷா வணிகவியலில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.550க்கும் மேல் மதிப்பெண் பெற்று 7 மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர் மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் M.M.K.முகைதீன் இப்றாகீம் வாழ்த்துக்களை பகிர்ந்ததோடு வெற்றிக்கு பாடுபட்ட தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளை பாராட்டியுள்ளார்.
மக்தூமியா மேல்நிலைப்பள்ளி மாணவர் கௌதம் 511/600 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 35 மாணவர்களில் 32 பேர் தேர்ச்சி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர் மாணவியர்களை பள்ளி தாளாளர் இஃப்திகார் ஹசன் மற்றும் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்தினர்.
502/600 மதிப்பெண் பெற்ற ஹமீதியா ஆண்கள் மேலநிலைப்பள்ளி மாணவர் முகம்மது ஆசிப் பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்வு எழுதிய 81 பேரில் 80 பேர் வெற்றி பெற்றனர்.
கீழக்கரையில் இம்முறை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களும் தேர்ச்சி குறைவாகவும் எடுத்திருப்பது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது. வழக்கம் போல் மாணவியர்கள் தங்களின் அபார திறமைகளை வெளிப்படுத்தி பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகங்களையும் அசத்தி விட்டனர்.
மேலும் 142க்கு 142 என்னும் இமாலய மதிப்பெண்களில் 100% வெற்றியை பதிவு செய்த ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை போன்று எதிர்காலத்தில் அனைத்து பள்ளிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்