கீழக்கரை மே, 6
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெருவில் அமைந்துள்ள ஓடக்கரை பள்ளிவாசலின் முக்கிய வீதியில் கழிவு நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக இது தொடர் கதையாகி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்