கீழக்கரை ஏப்ரல், 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பெயரில் முகநூல் கணக்கு துவக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் தொடர்பான அறிவிப்புகள் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு வந்தன.
தற்போது கீழக்கரை நகராட்சியின் பெயரில் பல போலியான முகநூல் ஐடி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் எது உண்மையான ஐடி என தெரியாமல் கீழக்கரை மக்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கிரௌன் ஹுசைன் கூறும்போது,
கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கின் மூலம் கடந்த காலங்களில் பல்வேறு அறிவிப்புகள்,செய்திகள் வந்தவண்ணமிருந்தன.தற்போது நிறைய போலி ஐடிகள் கணக்கில் உள்ளதால் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் பதிலளிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் போலிகள் விசயத்தில் விழித்துக்கொள்ளுமா?
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்