துபாய், 17
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது மேலும் பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது, தேசிய வானிலை ஆய்வு மையம் (என்.சி.எம்) வெள்ளம் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு ஆளாகக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக கடும் மழை பெய்துள்ளது . குறிப்பாக தலைநகர் அபுதாபியில் அதிகளவு மழை பதிவாக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ஐக்கிய அமீரகத்தில் பல இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் வேகமான மழையும் பெய்துள்ளது மேலும் அமீரகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அமீரகமெங்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது
மழையின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருமளவிலான வீதிகள், சாலைகள் மற்றும் வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மழையினால் வாகனப் போக்குவரத்துக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவனமாக இருக்குமாறு ஐக்கிய அமீரக அரசு கேட்டுக்கொண்டுள்ளது
காவல் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பிற அதிகாரிகளும் ஈரமான நிலையில் வாகனம் ஓட்டுவது குறித்து சமூக ஊடகங்களில் அறிவுறுத்தியுள்ளனர் மேலும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,//இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.