Spread the love

கோவை ஏப்ரல், 6

கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் பல்வேறு தொகுதிகளல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவையில் ஒரே குழுமத்தின் மருத்துவமனைகள் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூரில் செயல்படுகிறது. இதேபோல் மதுக்கரையில் செட்டிபாளையம் பிரிவில் இந்த குழுமத்திற்கு நர்சிங் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் ஏராளமான பணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த மருத்துவமனை உரிமையாளரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை குழும்மத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுக்கட்டமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விவரங்களை வெளியிடவில்லை.. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் தேர்தல் ஆணையம் பல்வேறு விவரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பணம் மருத்துவ சேவை மூலம் வந்ததா? அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்ட பணமா என்று விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *